ஆ எந்தன் பாக்கியத்தை | Aah Enthan Backyathai

 1. ஆ எந்தன் பாக்கியத்தை எண்ணிடவே
    எனக்கானந்தமே பரமானந்தமே
    மேதினி கஷ்டங்ள் மறந்து வேகம் - எந்தன்
    பாக்கிய தேசமதில் சேர்த்திடுவேன் - அதின்
    மகிமையை காண உள்ளம் கொதித்திடுதே
    அன்று மகிபரை என்றும்
    வாழ்த்தி துதித்திடுவேன்

2. பூலாக மேன்மைகள் ஒன்றும் வேண்டாம்
    இப்பூவின் சம்பாத்தியங்கள் ஒன்றும் வேண்டாம்
    லோகம் எனக்கும் நான்லோகத்திற்கும்
    முற்றும் யாகமாய் அர்ப்பணம் செய்கிறேன்
    நான் நாச லோகமே உன் நேசம் வெறும்
    கிலேசமல்லவோ - சொர்க லோகவாசம்
    எண்ண உள்ளம் வாஞ்சித்திடுதே - ஆ

3. இம்மைப்பொழு நேரிடும் கஷ்டமெல்லாம்
    என் எண்ணிடா மகிமையின் பதவிதானே
    சடுதியில் வரும் நேசர் அரைநொடியில் நான்
    அடைத்திடும் மணவறை மகிழ்வாசமே
    எந்தன் அழுகையின் கண்ணீரை
    துடைத்திடுவார் அவர் அடித்தொழு
    புகழ் பாடி ஆர்ப்பரிப்பேன்

4. கோடா கோடி தூதர் போற்றிடவே
    கவிபாடும் மனோகர கீதங்களும்
    வீணைகள் கைகளில் ஏந்தி நின்று என்றும்
    வீண்டவர் சங்கீதம் பாடிடுவார் அன்று
    விண்ணீல் நின்று அண்ணலையே
    போற்றிடுவேன் அங்கு விண்ணவர்
    சாயலாய் வாழ்த்தி பாடிடுவேன்

5. சிலுவை சுமந்து நான் ஏகிடுவேன் அவர்
    சிலுவையை எங்கும் கூறி உயர்த்திடுவேன்
    சிலுவையின் பாடுகள் பெருகிடவே நான்
    சிலுவையால் ஜெயகீதம் பாடிடுவேன் அப்போ
    சிலுவையின் மேன்மையால் களித்திடுவோம்
    நான் சிலுவையால் வரும் முடி அணிந்திடுவேன்

HOME